சுயம்வரா பார்வதி ஹோமம்


பொதுவாக ஒருவருக்கு திருமணம் தாமதமானால், திருமண தாமதத்திற்கு முதல் காரணமாக ராகு கேது தோஷம் என்பதாக இருக்கிறது, இரண்டாவது காரணம் செவ்வாய் தோஷம் என்பதாகவும், மூன்றாவதாக களத்திர தோஷம் என்பதாகவும், நான்காவதாக குரு பலன் இல்லை என்பதாகவும் ஜோதிடர்களால் கூறப்படுகிறது. ஜாதகருக்கு திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு.

அவர்களின் ஜாதகம் எந்த திசையில் நடைபெறுகிறது என்பதை அறிந்து பரிகாரம் செய்ய வேண்டும். தோஷ பரிகாரங்களில் மிகவும் சிறந்தவைகளாக விளங்குபவை ஹோமங்கள் ஆகும். புராண காலத்தில் தெய்வங்களும், சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், அரசர்களும் தாங்கள் விரும்பிய காரியங்கள் வெற்றி அடைய ஹோமங்கள் செய்து தமது இஷ்ட காரியங்கள் மற்றும் வரங்களையும் பெற்றுள்ளனர்.
திருமண தடை நீக்கும் யாகங்கள் சுயம்வர கலா பார்வதி ஹோமம் நடத்தினால் பெண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் நடத்தினால் ஆண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்
Type verification image:

verification image, type it in the box
* - Mandatory Fields