மஹா சண்டி யாகம்


துன்பங்கள் விலகி தெய்வீக பாதுகாப்பு பெறுவதற்கான ஹோமம்

அறிமுகம்

துர்கையின் அம்சமாகத் திகழும் சண்டி தேவி உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளையும் காத்து அழிக்கும் சர்வ வல்லமை வாய்ந்த சக்தியாக விளங்குகிறாள். உலகத்தின் அன்னையாகத் திகழும் சண்டி தேவியைக் குறித்து செய்யப்படும் இந்த ஹோமம் துன்பங்களை நீக்கி நம்மை பாதுகாக்கும் ஹோமம் ஆகும். நிறைவான வாழ்க்கை வாழ விடாமல் நம்மைத் தடுக்கும் திருஷ்டி தோஷங்கள் போன்றவற்றைப் போக்குவதற்கும், இப்பிறவி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்களைக் களைவதற்கும், உடல், ஆன்மா போன்ற இரண்டையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், இந்த ஹோமம் வரப்பிரசாதமாக விளங்குகிறது.

சண்டி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

சமுதாய, பொருளாதார நிலை உயரவும், அனைத்து முயற்சிகளில் வெற்றி அடையவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் செய்யப்படும் இந்த சண்டி ஹோமம், ஒரு பிரத்யேகமான ஹோமமாக விளங்குகிறது. உங்களைச் சூழ்ந்திருக்கும் தீமைகளைக் களைந்து, நம்பிக்கையை உருவாக்கி, உங்கள் திறமைகளை மேம்படுத்தி, அமைதியையும், செழிப்பையும் தரவல்லது, இது. தீய வினைகளை அகற்றி, எதிர்மறை சக்திகளைக் களைந்து, துன்பங்க நிக்கி, அன்னை துர்கா தேவியின் அருளைப் பெற்று வாழ, இந்த சண்டி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.

 

 

 

 


Type verification image:

verification image, type it in the box
* - Mandatory Fields

 

 

பாரம்பரிய முறை ஹோமம்

சண்டி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. சண்டி தேவியைப் போற்றும் விதமாக, 7௦௦ க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த மந்திரங்கள், பிரம்மாண்டமாக நடத்தப்\படும் இந்த ஹோமத்தில் ஓதப்படும். 2 முதல் 1௦ வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பலரும், இந்த வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். ஹோமத்தில், இந்தக் குழந்தைகள் அன்னை தேவியின் வடிவமாகக் கருதப்பட்டு, வணங்கி கௌரவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆடை மற்றும் பிற பரிசுகளும் வழங்கப்படும். வருடத்திற்கு ஒரு முறை இந்த ஹோமத்தைதத் தவறாமல் செய்வதன் மூலம், உங்கள் ஆசைகள் நிறைவேறி, பரிபூரணமான வாழ்வை, நீங்கள் வாழ இயலும்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்

சண்டிஹோமத்தின்நற்பலன்கள்

·      இடையூறுகளையும், தடைகளையும் நீக்கிக் கொள்ள இயலும்
·      பிரச்சினைகளைத் தீர்க்க இயலும்
·      உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்
·      உங்கள் இலக்குகளை அடைய இயலும்
·      திருஷ்டிகளைக் களைய இயலும்
·      சாப விமோசனம் பெற இயலும்
·      நீடித்த ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும் அனுபவிக்க இயலும்