மறைமுகமாகவும் எதிரியாக கருதுபவர்கள் பலர் இருப்பதை நம்மால் அறிய முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் நம் வளர்ச்சியை தடுப்பதற்கும் நமக்குத் தீங்கு விழைப்பதற்கும் பல வகையான மாந்திரீக முறைகளை கையாளுகின்றனர். அத்தகைய மனிதர்கள் நமக்கு செய்கின்ற எதிர்மறையான சக்தியின் தாக்குதல்களை தடுப்பதற்கான ஒரு சிறந்த ஹோமம் தான் சத்ரு சம்ஹார ஹோமம். மிக அற்புதமான இந்த ஹோமத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் சிறப்பான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உலகில் இருக்கின்ற எந்த ஒரு மனிதருக்கும் நேரடி அல்லது மறைமுக எதிரிகள் அறவே இல்லை என்பதை நிச்சயமாக கூற முடியாது. நம் சொந்த திறமையின் காரணமாக பொருளாதார வளர்ச்சி, புகழ் போன்றவற்றை நாம் அடைவதை, நம்மை சுற்றி இருக்கும் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் நம்மை அழிப்பதற்கு நேரடியான சில முயற்சிகளில் இறங்குகின்றனர். மேலும் சிலர் செய்வினை மாந்திரீகம் போன்ற மறைமுக வழிகளையும் கையாளுகின்றனர்.
சத்ரு சம்ஹார ஹோமத்தை உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பொருந்தும் திதிகளில் செய்வது சிறப்பு. இந்த சத்ரு சம்ஹார ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். முருகன் வழிபாட்டிற்குரிய வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், கந்த சஷ்டி விரத தினங்கள் போன்ற காலங்களில் செய்வது சிறப்பான பலன்களை தரும். முருகன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.